Monday 1 September 2014

தமிழ் இலக்கிய வரலாறு

நிர்மால்யம், நாகர்கோவில், 2000, 2001, 2002, 2003, 2004. சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில், 2005, 2006, 2007, 2008, 2009, 2010. முழுதும் திருத்தப்பட்ட பதிப்பு 2012.
கடைசிப் பதிப்பு விபரம்: விலை ரூ. 80, பக். 440, கிரௌன் அளவு.

            முன்னுரை, 31 தலைப்புகள், பின்னிணைப்புகள், மனோன்மணியம் பல்கலைக்கழகக் கல்லூரி, கோபிச்செட்டி பாளையம் மகளிர் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் பி.. தமிழ்பாடம், திண்டுக்கல் சாந்தி கிராமம் பல்கலை தமிழ் பி.. பாடம் ஆகியவற்றிலும் வேறு தன்னாட்சி கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் உள்ள நூல்.
நாஞ்சில் நாட்டு முதலியார் 
ஓலைச்சுவடிகள் காட்டும் சமூகம்

மக்கள் வெளியீடு, சென்னை, செப்டம்பர் 1999.
ரூ. 20, பக். 66, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            நாஞ்சில் நாட்டு அழகியபாண்டியபுரம் முதலியார் வீட்டு ஓலைகளில் 64 மூல ஓலைகள்; அதற்கு விரிவான முகவுரை பின்னிணைப்புகள் கொண்டது.
நூல் வடிவில் வராத 
கவிமணியின் படைப்புகள்

ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 1999.
ரூ. 20, பக். 94, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கையெழுத்துப் பிரதியில் உள்ள செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். உதிரிப்பாடல்கள், சில தமிழ்க் கட்டுரைகள், கையெழுத்துப் பிரதிகளில் சில செய்திகள் என்னும் மூன்று கட்டுரைகள் கொண்டது. பின்னிணைப்பில் நூல் வடிவில் வராத பாடல்கள் சிலவும், நூல் வடிவில் வராத கவிமணியின் கட்டுரைகளும், கவிமணியை சு.ரா. எடுத்த பேட்டியும் உள்ளன. தினமணிக்குக் கவிமணி அளித்த பேட்டியும் உண்டு.

            கவிமணி பற்றி நூலாசிரியர் 1982இல் காரைக்குடி ரோஜா முத்தையா செட்டியார் நூல் நிலையத்தில் சேகரித்த செய்திகளும், கவிமணியின் சீடர் சதாசிவம் கொடுத்த கையெழுத்து பிரதிகளும் இந்நூலை உருவாக்கப் பயன்பட்டன. கவிமணியின் கையெழுத்துப் பிரதிகள் சுமார் 600 பக்க அளவில் உள்ளன. இவை இந்நூலாசிரியரிடம் உள்ளன.