Friday 12 September 2014

தென்னிந்தியாவில் தோல்பாவைக்கூத்து
தன்னனானே பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2002.
ரூ. 75, பக். 174, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            தமிழக அரசு, தமிழ் வளர்ச்சி துறை 2002இல் வெளிவந்த சிறந்த நூலுக்காக பரிசும் பாராட்டும் பெற்ற நூல் (16.1.2003). தோல்பாவைக்கூத்து என்ற நிகழ்த்து கலை பற்றியது. கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இக்கலை நிகழும் முறை குறித்தும் சிறப்பாகத் தமிழகத்தைப் பற்றியும் பேசுகிறது. தோல்பாவைக்கூத்து நடத்தும் மண்டிகரைப் பற்றி விரிவான கட்டுரை உண்டு.
            முகவுரை உட்பட 7 தலைப்புகளும் 17 பின்னிணைப்புகளும் கொண்டது. 12 படங்கள் உண்டு.

            இந்நூல் பற்றி The Book Review vol. XXIV number 10 oct. 2003 என்ற இதழில் 3 பக்க விமர்சனம் எழுதியிருந்தார் வெங்கட்சாமிநாதன். 
இயக்கியம்மன் கதையும் வழிபாடும் (ப.ஆ.)
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, ஜூலை 2012.
ரூ. 45, பக். 136, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            தென் மாவட்டங்களில் வழக்கில் உள்ள நீலி அல்லது இயக்கியம்மன் என்ற தெய்வத்தைப் பற்றிய கதைப்பாடல் பதிப்பு. இதில் முகவுரை இயக்கி கதையும் வழிபாடும் என்னும் விரிவான கட்டுரைகள் இயக்கி கதைப் பாடல் மூலமும் உண்டு. நீலிகதை என்ற கதை மூலமும் உண்டு. பின்னிணைப்பில் இயக்கி தொடர்பான 11 கதைகள் உள்ளன. இவை எல்லாமே கள ஆய்வில் தொகுக்கப்பட்டவை.
            இந் நூலாசிரியர் 1981இல் மதுரை காமராஜர் பல்கலையில் பி.எச்.டி. ஆய்வுக்காகப் பதிவு செய்த தலைப்பு இசக்கி வழிபாடு. சில காரணங்களால் ஆய்வு தொடரவில்லை. அப்போது தொகுத்த செய்திகளை யாத்ரா மும்மாத இதழில் (வெங்கட்சாமிநாதன் ஆசிரியர்) வெளியிட்டார். அந்தக் கட்டுரையும், இயக்கியம்மன் பற்றி அப்போது தேடி எடுத்த நீலி கதையும் இந் நூலில் உள்ளன.

            இந்நூலை வெளியிட தமிழ் வளர்ச்சிக் கழகம் நிதியுதவி செய்துள்ளது.
கம்பரின் தனிப்பாடல்கள்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, மே 2002.
ரூ. 25, பக். 104, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            கம்பர் எழுதியதாகக் கருதப்படும் 95 பாடல்களும், எளிய உரையும் கொண்டது. முகவுரை, கம்பரின் வரலாற்றுக் குறிப்பும் உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் சிறிய அறிமுகவுரை, பாடல் விளக்கம் உடையது.
சுசீந்திரம் கோவில்
வருண் பதிப்பகம், நாகர்கோவில், 2001, 2002.
ரூ. 20, பக். 80, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் வரலாறு. சாதாரண பக்தனுக்காக எழுதப்பட்ட சிறு நூல்.
குமரி நாட்டுப்புறவியல் (ப.ஆ.)
தன்னனானே, சென்னை, டிசம்பர் 2001.
ரூ. 100, பக். 164, டெம்மி அளவு, அச்சில் இல்லை.

            கன்னியாகுமரி மாவட்ட நாட்டார் வழக்காறுகள் குறித்த       15 கட்டுரைகளின் தொகுப்பு 15 பேர்கள் எழுதியது.
நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2001.
ரூ. 30, பக். 126, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

புகழேந்திப் புலவர் பேரில் உள்ள 9 அம்மானைப் பாடல்களின் உரைநடை வடிவம்.
கவிமணியின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, மார்ச் 2001.
ரூ. 50, பக். 192, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 14 ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு (கவிமணி) Kerala Society papers இதழில் எழுதிய 13 கட்டுரைகளும், Malabar Quarterly இதழில் எழுதிய வேளாளர் பற்றிய கட்டுரையும் இந்நூலில் உள்ளன. இக்கட்டுரைகளில் A short note on Kandhalur Chalai என்பது மட்டும் சிறு பிரசுரமாக வந்தது (1936). அதில் பின்குறிப்பு, நீலகண்ட சாஸ்திரி விளக்கம் உண்டு. இம்மொழிபெயர்ப்புக்கு அந்தச் சிறுபிரசுரமே எடுக்கப்பட்டது.

            கவிமணியின் இந்த ஆங்கிலக் கட்டுரைகள் முதன்முதலாக நூலாசிரியரே தேடித் தொகுத்துள்ளார். தமிழில் இம்மொழிபெயர்ப்புகள் முதல்முதலாக வருகிறது.
தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம், 
சக ஆசிரியர் நா. இராமச் சந்திரன்;

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், சென்னை, 2001.
ரூ. 200, பக். 512, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            அ.கா. பெருமாள், நா. இராமச்சந்திரன் இருவரும் தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் நிதி நல்கையுடன் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று களஆய்வு நடத்தியும், புத்தகங்கள் மூலமும் சேகரித்த தகவல்கள் வழி எழுதப்பட்ட நூல். இதில் நூறு நிகழ்த்து கலைகளைப் பற்றிய செய்திகள் அகரவரிசைப்படி தரப்பட்டுள்ளது. தமிழக நிகழ்த்து கலைகள் பற்றி எழுதப்பட்ட முதல் களஞ்சிய நூல் இது.
            ஒரு கலை நிகழ்த்தப்படும் இடம், கலைஞர் சாதி, கோவில் சார்பு, நிகழ்த்தப்படும் முறை, நிகழும் காலம், இன்றைய நிலை என்னும் அடிப்படையில் எழுதப்பட்டது.
            தமிழ்க் குடிமகன் (அமைச்சர்) அணிந்துரை விரிவான முகவுரை பின்னிணைப்புகள் கொண்டது. பின்னிணைப்பில் நாட்டார் இசைக் கருவிகள் பற்றிய தகவல்கள் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள 29 இசைக் கருவிகளுக்கு வரைபடங்கள் உண்டு. தமிழகத்தில், நாட்டார் கலைகள் குறித்து வந்த நூற்கள், கட்டுரைகளின் பட்டியல் உண்டு. இறுதியில் பொருளடைவு கொடுக்கப்பட்டுள்ளது.
            இந்நூலில் 27 வண்ணப் படங்கள், 240 கறுப்பு வெள்ளைப் படங்கள் 79 வரை படங்கள் உள்ளன. இவை கள ஆய்வில் நேரடியாக எடுக்கப்பட்டவை. மூன்று ஆண்டுகளாக நிகழ்த்திய இவ்வாய்வில் மொத்தக் கலைகளும் 800 மணிநேர அளவில் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் எல்லா பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நாட்டார் நிகழ்த்து கலைகள் குறித்து வெளிவந்த எம்.பில், பி.எச்.டி ஆய்வேடுகளை படிப்பதற்காகவும் நூலாசிரியர்கள் தொடர்ந்து பயணம் செய்தனர்.

            தமிழகத்தில் நிகழ்த்து கலைகளை நிகழ்த்திய கலைஞர்களைச் சந்தித்து உரையாடிய தகவல்கள் நூலின் புத்தக அளவு கருதி சேர்க்கப்படவில்லை.
இராமகீர்த்தனம் (.)
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, ஆகஸ்ட் 2000.
ரூ. 55, பக் 176, அச்சில் இல்லை.

            வில்லிசைக் கலை நிகழ்வில் பாடப்பட்ட கதைப்பாடலின் பதிப்பு. முகவுரை கதைச் சுருக்கம் விரிவாக உள்ளது. இக்கதைப் பாடல் 5258 வரிகள் கொண்டது. ஏட்டிலிருந்து பெயர்த்து எழுதப்பட்டது. மூலம் ஆசிரியரிடம் உள்ளது. இக்கதைப்பாடல் பொதுவான ராமாயணத்திலிருந்து வேறுபட்டது. இந்நூலை வெளியிட தமிழக அரசு நிதி நல்கியுள்ளது.