Friday 12 September 2014

தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம், 
சக ஆசிரியர் நா. இராமச் சந்திரன்;

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், சென்னை, 2001.
ரூ. 200, பக். 512, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            அ.கா. பெருமாள், நா. இராமச்சந்திரன் இருவரும் தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் நிதி நல்கையுடன் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று களஆய்வு நடத்தியும், புத்தகங்கள் மூலமும் சேகரித்த தகவல்கள் வழி எழுதப்பட்ட நூல். இதில் நூறு நிகழ்த்து கலைகளைப் பற்றிய செய்திகள் அகரவரிசைப்படி தரப்பட்டுள்ளது. தமிழக நிகழ்த்து கலைகள் பற்றி எழுதப்பட்ட முதல் களஞ்சிய நூல் இது.
            ஒரு கலை நிகழ்த்தப்படும் இடம், கலைஞர் சாதி, கோவில் சார்பு, நிகழ்த்தப்படும் முறை, நிகழும் காலம், இன்றைய நிலை என்னும் அடிப்படையில் எழுதப்பட்டது.
            தமிழ்க் குடிமகன் (அமைச்சர்) அணிந்துரை விரிவான முகவுரை பின்னிணைப்புகள் கொண்டது. பின்னிணைப்பில் நாட்டார் இசைக் கருவிகள் பற்றிய தகவல்கள் அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள 29 இசைக் கருவிகளுக்கு வரைபடங்கள் உண்டு. தமிழகத்தில், நாட்டார் கலைகள் குறித்து வந்த நூற்கள், கட்டுரைகளின் பட்டியல் உண்டு. இறுதியில் பொருளடைவு கொடுக்கப்பட்டுள்ளது.
            இந்நூலில் 27 வண்ணப் படங்கள், 240 கறுப்பு வெள்ளைப் படங்கள் 79 வரை படங்கள் உள்ளன. இவை கள ஆய்வில் நேரடியாக எடுக்கப்பட்டவை. மூன்று ஆண்டுகளாக நிகழ்த்திய இவ்வாய்வில் மொத்தக் கலைகளும் 800 மணிநேர அளவில் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் எல்லா பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நாட்டார் நிகழ்த்து கலைகள் குறித்து வெளிவந்த எம்.பில், பி.எச்.டி ஆய்வேடுகளை படிப்பதற்காகவும் நூலாசிரியர்கள் தொடர்ந்து பயணம் செய்தனர்.

            தமிழகத்தில் நிகழ்த்து கலைகளை நிகழ்த்திய கலைஞர்களைச் சந்தித்து உரையாடிய தகவல்கள் நூலின் புத்தக அளவு கருதி சேர்க்கப்படவில்லை.

No comments:

Post a Comment