Friday 15 August 2014

கோவில் சார்ந்த நாட்டார் கலைகள்




வருண் பதிப்பகம், நாகர்கோவில், அக்டோபர் 1997.
ரூ. 45, பக். 166, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
            தமிழ் நாடு இயலிசை நாடக மன்றத்தின் நிதி நல்கையுடன் களமெழுத்துப் பாட்டும், வில்லிசை, கணியான் ஆட்டம், கண்ணன் ஆட்டம் ஆகிய நான்கு கலைகளைப் பற்றி களஆய்வு வழி சேகரித்த அறிக்கை இந்நூல். இந்நூலில் 9 பின்னிணைப்புகள் உண்டு. நூலாசிரியரின் முகவுரை, டாக்டர் தெ. லூர்து அவர்களின் அணிந்துரையுடன் கூடியது.

பெயரில் என்ன இருக்கிறது

பத்மா புக் ஸ்டால், நாகர்கோவில் 1997.
ரூ. 23, பக். 126, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            கட்டுரைத் தொகுப்பு. பெயரில் என்ன இருக்கிறது, கிராமத்து மண்ணில் அந்நிய எதிர்ப்பு, கதைப் பாடல்களின் கம்பெனி எதிர்ப்பு, பாரதி கண்ட மானுட நேயம், சுவாதித் திருநாள், கிராமத்து மண்ணோசை ஆகிய 6 கட்டுரைகளைக் கொண்டது. நாட்டார் வழக்காற்றுச் செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்.

பொதுக்கட்டுரைகள்

பத்மா புக் ஏஜன்சி பப்ளிசர்ஸ்நாகர்கோவில்முதல் பதிப்பு ஜூலை 1997பிற பதிப்புகள் 1998, 1999, 2000, 2001, 2002, 2004.

            பள்ளி மாணவர்கள் தமிழ் பாடத்திட்டத்திற்காக திட்டமிடப்பட்டு எழுதப்பட்ட 25 கட்டுரைகளின் தொகுப்பு.

நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி

ரோகினி பிரண்டர்ஸ் பிரைவைட் லிமிட்டெட்; நாகர்கோவில், 1995.
ரூ. 38, பக். 116, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            நூலாசிரியர் களஆய்வு செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களை 11 அத்தியாயங்களாக எழுதியதன் தொகுப்பு. நூலாசிரியரின் முகவுரை ராமச்சந்திரன் (தூய சேவியர் கல்லூரி) அணிந்துரை உண்டு. பாளையன்கோட்டை தூய சேவியர் கல்லூரி முதுகலை நாட்டார் வழக்காற்றியல் பாடத்திட்டத்தில் (1996 – 2000) இருந்த நூல். இந்நூலின் சில பகுதிகள் தீராநதி மாத இதழில் வந்தன.

குமரி மாவட்ட வரலாறு

சுபா பதிப்பகம், நாகர்கோவில், பிப்ரவரி 1995, ஜனவரி 1996.
ரூ. 32, பக். 212, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            ஆய் காலம் பண்பாடும் கலையும் உட்பட 13 தலைப்புகள். கன்னியாகுமரி மாவட்டத்தின் 2000 ஆண்டுகள் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவது. கைவிளக்கு (நாகர்கோவில்) மாத இதழில் 13 மாதங்களாக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. (தினமணி விமர்சனம் 10.09.1995)

ஆய்வுக்கட்டுரைகள்

பத்மா புக்ஸ் ஏஜன்சி, சென்னை, முதல் பதிப்பு 1993.
ரூ. 15, பக். 120, கிரௌன் அளவு, அச்சில் இல்லை. இரண்டாம் பதிப்பு 1993; பிற பதிப்புகள் 1997, 2003, 2004, 2005, 2006, 2007.
            கட்டுரைத் தொகுதி: அவை நந்தனார் கதையின் வெவ்வேறு வடிவங்கள், கவிஞர் ந. பிச்சமூர்த்தி, கவிமணியின் ஆராய்ச்சிகள், தெருக்கூத்து, செண்பகராமன் பள்ளு, ஒரு யதார்த்த நாவல், வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப் பண்பு, திரையுலகில் கலைவாணர் பங்களிப்பு, திருநாளைப் போவார் என்ற தொன்மம் ஆகியன.

            இந்நூல் மனோன்மணியம் பல்கலைக்கழகம் பி.எ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு பாடமாக இருந்தது. (1996 – 1999) பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியிலும் வேறு சில கல்லூரிகளிலும் 2003 – 2007 ஆண்டுகளில் பாடமாக இருந்தது.

தொல் பழம் சமயக்கூறுகள்

பயோனீர் புக் சர்வீசஸ், சென்னை, டிசம்பர் 1990.
ரூ. 18, பக். 168, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.

            தொல் பழம் சமயக்கூறுகள், தொல் பழம் தெய்வ வழிபாடு, நீலி அம்மன் கதையும் வழிபாடும், சுடலைமாடன் கதையும் வழிபாடும் என 4 கட்டுரைகள் கொண்டது. பின்னிணைப்பில் இயக்கி நரபலி கேட்பது உட்பட 24 தலைப்புகள் உள்ளன. இந்நூல் பற்றி தினமலரில் (14.08.1991) விரிவான விமர்சனம் உண்டு. எழுதியவர் தமிழப்பன் “… முயலைக் குறிவைத்து எய்து வெற்றி பெறுவதை விட யானை பிழைத்த வேல் இனிதல்லவா. மிகப் பெரிதுபட்ட அரிய பெரிய தலைப்பை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளுவதே ஒருவரின் துணிச்சல்; அவ்வகையில் ஆசிரியரின் துணிச்சலையும் அரிய உழைப்பையும் தமிழுலகம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது என்கிறார்.

கவிமணியின் இன்னொரு பக்கம்

பயோனியர் புக் சர்வீசஸ், சென்னை, ஆகஸ்ட் 1990.
ரூ. 17, பக். 134, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை மதிப்பீடு செய்த நூல். கவிமணியை கவிஞராகவே பார்த்த பார்வையிலிருந்து மாறுபட்டு ஆராய்ந்து பார்த்த நூல். கவிமணியும் கல்வெட்டாராய்ச்சியும், கவிமணியும் நாட்டார் பாடல்களும், கவிமணியின் இன்னொரு பக்கம் என 3 கட்டுரைகள் உடையது. பின்னிணைப்பில் கவிமணியின் ஆங்கிலக் கட்டுரைகளின் பட்டியல், ஒரு தமிழ் பெரியாரின் மறைவு, கவிமணி கவிதைகளின் யாப்பு வடிவம், கவிமணி குறித்த மலர்கள், நூற்கள், ஆங்கிலக் கட்டுரைகள் பட்டியல் ஆகியன உள்ளன. சென்னை ஆறிவியல் ஆய்வு நிறுவனர் ஜான் சாமுவெல்லின் அணிந்துரை, பதிப்பாளர் முகவுரை, ஆசிரியர் நன்றியுரை ஆகியனவும் உண்டு. கவிமணி எழுதிய கட்டுரைகளின் மூலத்தைத் தேடி ஆராய்ந்து எழுதிய ஆய்வுநூல்.
            இந்நூல் குறித்து தினமணி பத்திரிகை (8.09.1990) பெரும்பாலும் கவிமணியைக் கவிஞர் என்றே அறிந்த வாசகர்களுக்கு அவரின் பல்வேறு முகங்களை வெளிப்படுத்திக் காட்டும் நூல் எனக் கூறியது. குமுதம் வார இதழ் கவிமணி கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டினார் என்பது புதிய செய்தி என்றும் (27.09.1990) மங்களம் வாரஇதழ் (7.01.1991) அபூர்வமான புத்தகம்; நிறைய செய்திகள் என்றும் கூறும். இந்து பத்திரிகை (12.03.1991) “…. But the other side of the poet as the title of the books suggests has been brought out in this book …” என்றும் கூறும். தினமணி இந்நூல் குறித்த விரிவான விமர்சனத்தை இரண்டாம் முறையாகக் கால் பக்கம் வெளியிட்டது. எழுதியவர் சீனி. விசுவநாதன் (13.04.1991). இதில் கவிமணியின் மறுபக்கத்தை காட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காகவும் உழைப்பிற்காகவும் அரிய பின்னிணைப்புகளுக்காகவும் நூலாசிரியர் பாராட்டப்பட வேண்டியவர்என்கிறார் சீனி விசுவநாதன்.



தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியின் கணிப்பு

 க்ரியா, சென்னை, 1983, ஜூன் 19.
ரூ. 6, பக். 64, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி பல்வேறு நூற்களில் கூறிய கருத்துக்களைத் தொகுத்துத் தருவது. நூலாசிரியரின் முகவுரை, வித்துவான் மு. சண்முகம்பிள்னையின் அணிந்துரை ஆகியனவும் பின்னிணைப்பில் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் வாழ்க்கைக் குறிப்பும், எஸ்.வி. எழுதிய புத்தகங்கள், கட்டுரைகளின் பட்டியலும் உள்ளன.
            எஸ்.வி.யின் தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி சாதாரண வாசகனும், மாணவனும் அறிய எளிமையாக எழுதப்பட்ட கையேடு போன்ற நூல்.
            Indian Express பத்திரிகை இந் நூல் பற்றிய விரிவான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. (27.02.1985) இதை எழுதியவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி “… Arguments have been clearly marshalled for daling these literary works. A long list of mr. pillai & work and contribalions to Journals has been appended. The author has done a commendable job in restruction mr. Pillai & fame as a giant among researches.”

கன்னியாகுமரி அன்னை மாயம்மா

கன்னியா பிரசுராலயம், நாகர்கோவில் 1980 ஜூன் 19.
ரூ. 5, பக். 68, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            கன்னியாகுமரி கடற்கரையில் வாழ்ந்த சித்த புருஷி ஒருவரைப் பற்றிய நூல். அவருடன் கூடவே இருந்து சேகரித்த செய்திகளின் தொகுப்பு. மாயி என பொதுவாக அழைக்கப்படும் இந்த சித்த புருஷி வடஇந்திய மாநிலத்தவர்இவரைப் போன்ற இன்னொரு சித்தர் மருத்துவாழ்மலை அடிவாரத்தில் வாழ்ந்த நைனார் சுவாமிகள்அவரைப் பற்றியும் இந்நூலில் தகவல் உண்டுநூலாசிரியரின் சிறு முகவுரைபேராடாக்டர் நசஞ்சீவியின் அணிந்துரை, அன்னை மாயியின் இரண்டு படங்கள் உண்டுமாயி பற்றி சஞ்சீவி எழுதிய கட்டுரை இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.