பயோனியர் புக் சர்வீசஸ், சென்னை,
ஆகஸ்ட் 1990.
ரூ. 17, பக். 134, கிரௌன் அளவு, அச்சில்
இல்லை.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை மதிப்பீடு செய்த
நூல். கவிமணியை கவிஞராகவே பார்த்த பார்வையிலிருந்து மாறுபட்டு
ஆராய்ந்து பார்த்த நூல். கவிமணியும் கல்வெட்டாராய்ச்சியும்,
கவிமணியும் நாட்டார் பாடல்களும், கவிமணியின் இன்னொரு
பக்கம் என 3 கட்டுரைகள் உடையது. பின்னிணைப்பில்
கவிமணியின் ஆங்கிலக் கட்டுரைகளின் பட்டியல், ஒரு தமிழ் பெரியாரின்
மறைவு, கவிமணி கவிதைகளின் யாப்பு வடிவம், கவிமணி குறித்த மலர்கள், நூற்கள், ஆங்கிலக் கட்டுரைகள் பட்டியல் ஆகியன உள்ளன. சென்னை ஆறிவியல்
ஆய்வு நிறுவனர் ஜான் சாமுவெல்லின் அணிந்துரை, பதிப்பாளர் முகவுரை,
ஆசிரியர் நன்றியுரை ஆகியனவும் உண்டு. கவிமணி எழுதிய
கட்டுரைகளின் மூலத்தைத் தேடி ஆராய்ந்து எழுதிய ஆய்வுநூல்.
இந்நூல் குறித்து தினமணி பத்திரிகை (8.09.1990) “பெரும்பாலும்
கவிமணியைக் கவிஞர் என்றே அறிந்த வாசகர்களுக்கு அவரின் பல்வேறு முகங்களை
வெளிப்படுத்திக் காட்டும் நூல்” எனக் கூறியது. குமுதம் வார
இதழ் “கவிமணி கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டினார் என்பது
புதிய செய்தி” என்றும் (27.09.1990) மங்களம்
வாரஇதழ் (7.01.1991) “அபூர்வமான புத்தகம்; நிறைய செய்திகள்” என்றும் கூறும். இந்து பத்திரிகை
(12.03.1991) “…. But the other side of the poet as the title of the
books suggests has been brought out in this book …” என்றும்
கூறும். தினமணி இந்நூல் குறித்த விரிவான விமர்சனத்தை இரண்டாம் முறையாகக் கால்
பக்கம் வெளியிட்டது. எழுதியவர் சீனி. விசுவநாதன் (13.04.1991). இதில் “கவிமணியின் மறுபக்கத்தை காட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காகவும்
உழைப்பிற்காகவும் அரிய பின்னிணைப்புகளுக்காகவும் நூலாசிரியர் பாராட்டப்பட
வேண்டியவர்” என்கிறார் சீனி விசுவநாதன்.
No comments:
Post a Comment