Monday, 1 September 2014

நூல் வடிவில் வராத 
கவிமணியின் படைப்புகள்

ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 1999.
ரூ. 20, பக். 94, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
            கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கையெழுத்துப் பிரதியில் உள்ள செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். உதிரிப்பாடல்கள், சில தமிழ்க் கட்டுரைகள், கையெழுத்துப் பிரதிகளில் சில செய்திகள் என்னும் மூன்று கட்டுரைகள் கொண்டது. பின்னிணைப்பில் நூல் வடிவில் வராத பாடல்கள் சிலவும், நூல் வடிவில் வராத கவிமணியின் கட்டுரைகளும், கவிமணியை சு.ரா. எடுத்த பேட்டியும் உள்ளன. தினமணிக்குக் கவிமணி அளித்த பேட்டியும் உண்டு.

            கவிமணி பற்றி நூலாசிரியர் 1982இல் காரைக்குடி ரோஜா முத்தையா செட்டியார் நூல் நிலையத்தில் சேகரித்த செய்திகளும், கவிமணியின் சீடர் சதாசிவம் கொடுத்த கையெழுத்து பிரதிகளும் இந்நூலை உருவாக்கப் பயன்பட்டன. கவிமணியின் கையெழுத்துப் பிரதிகள் சுமார் 600 பக்க அளவில் உள்ளன. இவை இந்நூலாசிரியரிடம் உள்ளன.

No comments:

Post a Comment