மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, ஆகஸ்ட், 1978.
ரூ. 3.25, பக் 64, கிரௌன் அளவு, அச்சில் இல்லை.
54 சங்க
பாடல்களில் தற்கால மொழி வடிவம். இவை இலக்கண வரையறைக்கு உட்பட்ட கவிதை மரபிலும்
புதுகவிதை அமைப்பிலும் உள்ள பாடல்கள். சோதனை முயற்சி, நூலாசிரியரின் முகவுரை
பேராசிரியர் சி. ஜேசுதாசரின் மூன்று பக்க அணிந்துரை கொண்டது. ஒவ்வொரு பாடலுக்கும்
சிறு அறிமுகவுரை, பாடல் எண் குறிப்பு, ஆசிரியர் பெயர் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன. பேரா.சி. ஜேசுதாசன்
“… இந்த மொழிபெயர்ப்பு அவசியம்; இந்த
முயற்சியில் துணிச்சலுடன் முதலடி எடுத்து வைக்கிறார் பெருமாள். தமிழ் இலக்கிய
வரலாற்றில் இதுதான் முதல் முயற்சி...” என்கிறார்.
மொழிபெயர்ப்பு மாதிரிக்கு ஒன்று,
அந்த மாதம் அந்த நிலவில்
தந்தையும் உண்டு நாடும் உண்டு
இந்த மாதம் இந்த நிலவில்
வெற்றி முரசு வேந்தர் எங்கள்
மலையும் கொண்டார்; தந்தையும் இல்லை
பாரிமகளிர்.
(புறநானூறு எண். 112)
இந்த
நூல் பற்றி Indian Express பத்திரிகை (24.08.1979) “… Appropriate heading are given for each
stanza. As the author himself says. It is old wine in new bottle. This is a
novel venture meant to cater to the average literate man. Since the sangam
poems are a bit – too hard for time. Some of the rendering are really good
white some others appear ani poetic. Anghow as a venture this is commendable''. என்று விமர்சிக்கிறது.
No comments:
Post a Comment