பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவில்
ரூ. 35, பக். 128, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
கன்னியாகுமரி
மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பறக்கை என்னும் கிராமத்தில் உள்ள மதுசூதனப்
பெருமாள் கோவில் வரலாறு. பறக்கை ஊரும் சிறப்பும், பறக்கை ஊர்ப் பெயர், பறக்கைத்
தலபுராணமும் வாய்மொழிக் கதைகளும், கோவிலின் அமைப்பும் பிறவும், கோவிலின்
சிற்பங்களும் விமானமும், பறக்கைக் கல்வெட்டுகளின் நிபந்தச் செய்திகள், பறக்கையில்
உள்ள காசிவிசுவநாதர் கோவில், வடக்குத் தெரு மகாதேவன் கோவில், திருவாவடுதுறை மடம்,
வலிகொலி அம்மன் கோவில் ஆகியவை பற்றிய செய்திகள்
உள்ளன.
முகவுரை,
டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை, 13 பின்னிணைப்புகள் உண்டு. 26
படங்களும் உள்ளன. அணிந்துரை எழுதிய வ.அய்.சு. “நூலைப் படித்தவுடன் பறக்கை கோவிலைச் சென்று காணவேண்டும் என்ற
உந்துதலில் அங்கு சென்று கண்டு வியந்தேன்” என்கிறார்.
No comments:
Post a Comment