ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
தமிழினி, சென்னை, டிசம்பர் 2007, 2014.
ரூ. 190, பக். 288, டெம்மி அளவு.
கன்னியாகுமரி
மாவட்டம், கல்குளம் வட்டம் திருவட்டாறு ஊரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலின்
வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. நூல் ஆரம்பத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்
த. பிச்சாண்டி கி.ஆ.ப. அவர்களின் அணிந்துரை, நூலாசிரியரின் முகவுரை, நன்றியுரை
ஆகியன உள்ளன. நூல் 9 இயல்கள் கொண்டது. முதல் இயல் (வளநீர் வாட்டாறு) திருவட்டாறு
ஊர் பின்னணியை விளக்குவது. இந்த ஊர் சங்கப் பாடலில் (புறநா.) பேசப்படுவது; தொடர்ந்த வரலாற்றுப் பின்னணி உண்டு.
இரண்டாம் இயல் (வான் ஏற வழி தந்த வாட்டாறு)
திருவட்டாறு ஊரின் தனி வரலாற்றை கூறுவது. நம்மாழ்வார்
பாடிய தலம்; சைதன்யர் வருகை தந்த தலம் இது என கூறுவது,
மூன்றாம் இயல் கோவில் அமைப்பு கட்டுமானப் பணி பற்றியது. இக்கோவில் பழமை கி.பி.
8ஆம் நூற்றாண்டு வரை ஆதாரபூர்வமாய் சொல்வது என இவ்வியல் குறிப்பிடும் நான்காம்
இயல் கருவறை பரிவார தெய்வங்கள் பற்றியது. தொடர்ந்த இயல்கள் தலபுராணம், கோவில்
பூசகர், தினப்பூஜை – விழா, சிற்பம், ஓவியம், கோவில் கல்வெட்டுச் செய்திகள் என்பன
பற்றிப் பேசுகின்றன.
பின்னிணைப்பில்
25 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. இவை பெருமளவில் மூல ஆதாரச் செய்திகள்; முன்பு அச்சில் வராதவையும் உண்டு; திருவட்டாரில் உள்ள பிற கோவில்கள் பற்றியும் பின்னிணைப்பில் செய்திகள் உள்ளன.
விஷ்ணுவின் தசாவதாரங்கள் அல்லாத பிற அவதாரங்களில் ஒன்று ஆதிகேசவன்.
பாம்பணை மேல் பள்ளிகொண்ட வடிவம். இக்கோவிலின் சயன
விக்கிரகம் முக்கியமானது. கோவில் வளாகம் பெரிது. சிற்பங்களும் அதிகம்.
இக்கோவிலில் ஓராண்டு உழைப்பின் பலன் இந்நூல்; முக்கியமாக
இப்புத்தகத்தை வெளியிட்ட தமிழினி வசந்தகுமார், இக்கோவில் படங்களை
எடுக்கப் பலமுறை வந்தார். இந்நூலில் 62 பக்கங்களில் 120 படங்கள் உள்ளன. கோவில் வரைபடமும், வண்ண பீடங்களும் உண்டு.
இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு “… திருவட்டாறு கோவிலுக்கு
வந்த பிரபலங்கள் பல உண்டு; அவர்கள் நூலாசிரியரைத் தனிப்பட்ட முறையில்
தொடர்பு கொண்டு பாராட்டினர். அதோடு கோவிலுக்கும் மக்களுக்குமான
உறவைச் சித்தரிக்கும் நூல் இது” என்பதும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment