அலைகளினூடே (தொ.ஆ.)
தமிழினி, சென்னை, டிசம்பர் 2005.
ரூ. 170, பக். 270, டெம்மி அளவு, அச்சில் இல்லை.
சுனாமியின்
எதிரொலி கடற்கரை மக்களைப் பற்றிய பதிவுகள் இல்லை எனத் தெரிந்தது. இதன் விளைவு
அலைகளினூடே கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடந்த (மே 14,15 – 2005) கருத்தரங்கக்
கட்டுரைகள். 9 பேர்கள் படித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்நூலில்
பின்னிணைப்புகள் மிக முக்கியமானவை. இந்நூலின் தொகுப்பாசிரியர் கடற்கரை. இளைஞர்கள், மாணவர்கள் உதவியுடன் 68 கி.மீ.
பயணம் செய்து 44 கிராமங்களில் திரட்டிய செய்திகள் உள்ளன. ஒவ்வொரு கிராமங்களில்
விரிவாக கள ஆய்வு செய்து திரட்டப்பட்ட செய்திகளின் சுருக்கம் தொகுப்பில் உள்ளன. 24
கிராமங்களிலும் கள ஆய்வு செய்யப்பட்ட போது கிடைத்த அனுபவம் கருத்தரங்கில்
பேசப்பட்டது; அது இந்நூலில் இடம்பெறவில்லை. கள ஆய்வின்போது ஏற்பட்ட உடல் நல பாதிப்பைக்கூட பொருட்படுத்தாமல் சென்றதும்
இந்நூலின் அனுபவம். கடல்சார் மக்களின் வழிபாடு தொடர்பான சொற்களம்
இதில் உண்டு.
No comments:
Post a Comment