அகிலத்திரட்டு அம்மானை (ப.ஆ.)
கன்னியாகுமரி,
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தமிழ் மாவட்டங்களிலும், தமிழகத்தில் சில
பகுதிகளிலும், திருவனந்தபுரம் மாவட்டத்திலும் நடைமுறையில் உள்ள “அய்யா வழிபாடு” தொடர்பான
நூல். அய்யாவைகுண்டர் அருளியது. 15196 வரிகள்
கொண்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அய்யாவின் இப்புனித நூல்
இந்த வழிபாட்டுக்காரர்களால் பாராயணம் செய்யப்படுவது.
முதல் முறையாக அய்யா வழி அல்லாத ஒருவரால் பதிப்பிக்கப்படுவது. அய்யா வழிபாட்டின் பிரதம குருவான பாலபிரஜாதிபதி அடிகளாரின் வாழ்த்துரையும் பதிப்பாசிரியரின் முகவுரையும் உண்டு. இம் முகவுரை 80 பக்கங்கள் கொண்டது. “இந்த முகவுரை ஆராய்ச்சி முகவுரை; இதுவரை அகிலத்திரட்டைப் பார்த்த பார்வையிலிருந்து மாறுபட்டது; நுட்பமான செய்திகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன; குறிப்பாக ராமாயணம் மகாபாரதம் பற்றிய அகிலத்திரட்டில் வரும் செய்திகளின் விளக்கம் இதற்கு முந்தய பதிப்புகளில் இல்லாதவை” என்று இந்நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசினார்.

இந்நூலைப்
பதிப்பித்ததற்காக பதிப்பகத்தாரும், பதிப்பாசிரியரும் குறிப்பிட்ட சிலரால்
பழிக்கப்பட்டனர். இப்பதிப்பை வாங்குதல் கூடாது எனவும் தீர்மானம் போட்டனர். ஆனால்
தமிழகத்தில் அய்யாவழியினரில் சிலரும், அல்லாதவரும் இப்புத்தகத்தை வாங்கினர்.
இப்போது இது அச்சில் இல்லை.
No comments:
Post a Comment